Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆசிய விளையாட்டில் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வரவேற்பு

ஆசிய விளையாட்டில் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வரவேற்பு
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்று நாடு திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் பங்களிப்பாக 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று அசத்தினர்.

பகிரவும் WhatsApp Facebook

ஜப்பானில் சமீபத்தில் முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 30 தங்கம் உட்பட 114 பதக்கங்கள் வென்று அசத்தியது.

அதில், தமிழக வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் பங்களிப்பாக 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், பதக்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜ், நவீன் சிவகுமார், துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ், ஜெஹான் டடொரப் மதன், பேபி சஹானா ரவி உள்ளிட்டோர் அடங்கிய தமிழக அணி நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது.

அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் வீரர்கள், வீரங்கனைகளுக்கு ஏலக்காய் மாலை, மலர்கீடம், சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர்.

முந்தைய செய்தி
மருத்துவர்களின் கட்டாய பணிக் காலத்தை ஓராண்டாக குறைக்க வலியுறுத்தல்
அடுத்த செய்தி
பழநி சண்முகநதியில் 500 கன அடி திறப்பு

தொடர்புடைய செய்திகள்